என் விழியோரம் வழியும் கண்ணீர் துளித்துளியாய் வடியட்டும்...
கையால் துடைத்து தடத்தையழிக்க நான் விரும்பவில்லை...
கார்த்திகையின் கண்ணீர் மழையிலும் கரைந்து விடக்கூடாது...
சுடர் விட்டெரியும் விளக்கின் வெப்பத்திலும் உலர்ந்து விடக்கூடாது...
உடலெங்கும் வடிந்து உரமாய் எனக்குள்ளே அவை உறையட்டுமே...
என்னுள்ளே விதைக்கப்பட்ட வீரம் வீறு கொண்டெழுவதற்காக...
கேட்டுப் பாருங்கள் :
ReplyDeleteதாயகக் கனவொடு சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...
உயிர்கள் உருகும் வலியில் எங்கள் உள்ளம் அழுகிறது...
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே...
மாரி மழை தூவுறது. மஞ்சள் வெய்யில் காய்கிறது. ஆரிராரோ பாடியவாய் அந்தரித்து மாய்கிறது...
கண்மூடித் தூங்கும் எந்தன் தோழா கல்லறை திறந்து கொஞ்சம் வாடா...
கார்த்திகைப் பூவே கார்த்திகைப் பூவே கல்லறை மடியினில் மலர்ந்து விடு...
என் இனமே என் சனமே என்னை உனக்குத் தெரிகிறதா?...