ஒத்த உருவமுடைய ஒன்பது மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.
Simple...
ReplyDelete1.மூன்று மூன்றாக மாபிள்களைப் பிரிக்கவும்.
2.அப்படிப் பிரித்த மூன்று மாபிள் குழுமங்களில் இரண்டை எடுத்து நெம்புத்தராசில் இட்டு நிறைவித்தியாசமான் மாபிள் குழுமத்தைக் கண்டுகொள்ளலாம்.
3. இரண்டும் சமனாயிருப்பின், மூன்றாவது குழும மாபிள்களை மூன்றாய்ப் பிரித்து இரண்டை மாபிள்களை நிறுத்து நிறைவித்தியாசங்களை அறியலாம்.
கீத், முயற்சிக்குப் பாராட்டுக்கள். மூன்றாவது நிறுவை அவசியமானது. ஏனெனில் கண்டுபிடிக்க வேண்டிய மாபிள் நிறை குறைந்ததோ கூடியதோ என்றும் கண்டு பிடிக்க வேண்டும். அதனை கண்டு பிடிப்பதில் தான் சிக்கல் இருக்கிறது.
ReplyDelete1.மூன்று மூன்றாக மாபிள்களைப் பிரிக்கவும்.
2.அப்படிப் பிரித்த மூன்று மாபிள் குழுமங்களில் இரண்டை எடுத்து நெம்புத்தராசில் இட்டு நிறைவித்தியாசமான் மாபிள் குழுமத்தைக் கண்டுகொள்ளலாம்.
2.1) குழுமங்கள் சமனற்றதாயின் ஏதாவதொரு (உ+ம் நிறுவையின் போது உயர்ந்த பகுதியிலிருக்கும்) மாபிள்களை வேறு படுத்தி மற்றைய (சம நிறையுள்ள) மூன்று மாபிள் குழுமத்துடனும் நிறுக்கலாம்.
2.1.1) சமமாயின் தாழ்ந்த பகுதியிலிருந்த மூன்று மாபிள்களில் ஒன்று நிறை குறைந்தது என்ற முடிவுக்கு வரலாம். இனி அவற்றில் ஏதாவது இரண்டு மாபிள்களை நிறுக்கும் போது
2.1.1.1) அவை சமமாயின் மூன்றாவது மாபிள் நிறை குறைந்தது.
2.1.1.2) அவை சமமற்றதாயின் தாழ்ந்த பகுதி மாபிள் நிறை குறைந்தது என்ற முடிவுக்கு வரலாம்.
2.1.2)சமமற்றதாயின் இறுதியாக தராசிலிட்ட (சம நிறையுள்ள) மாபிள்களை விட நிறை கூடியதா குறைந்ததா என அறிய முடியும். இனி 2.1.1.1, 2.1.1.2 படி முறைகளைப் பின்பற்றி கண்டு பிடிக்க வேண்டிய மாபிளையும் அது நிறை குறைந்ததா கூடியதா எனவும் கண்டு பிடிக்கலாம்.
3. இரண்டும் சமனாயிருப்பின், மூன்றாவது குழும மாபிள்களை மூன்றாய்ப் பிரித்து இரண்டை மாபிள்களை நிறுத்து நிறைவித்தியாசங்களை அறியலாம்.
3.1) அவை சமனாயின் மூன்றாவது மாபிளையும் வேறு ஏதாவது மாபிளையும் நிறுத்து மூன்றாவது மாபிள் நிறை கூடியதோ குறைந்ததோ எனக் கண்டறியலாம்.
3.2) அவை சமன் இல்லாவிடின் அதில் ஒரு மாபிளை எடுத்து (உ+ம் நிறுத்த போது தாழ்ந்த பகுதியிலிருந்த) வேறொரு மாபிளுடன் நிறுக்க வேண்டும்.
3.2.1) அவை சமனாயின் உயர்ந்த பகுதியிலிருந்த மாபிள் நிறை கூடிய மாபிள் ஆகும்.
3.2.2) சமனற்றதாயின் தாழ்ந்த பகுதியிலிருக்கும் மாபிள் நிறை குறைந்த மாபிள் ஆகும்.
மேற்தரப்பட்ட விடையில் இலக்க ஒழுங்கு முறையைப் பின்பற்றி சிந்தித்தால் இலகுவில் விளங்கிக் கொள்ளலாம் என நம்புகிறேன்.