“என்ன முதலாளி, இப்ப கடும் உழைப்புப் போல... ஆளைக் காணவே கிடைக்குதில்லை...”
“சும்மா போடா, இருக்கிற வயித்தெரிச்சலைக் கிண்டாத... நானே எப்ப கடையை இழுத்து மூடுவன் எண்டிருக்கிறன்... நீ வேற விசர்க்கதை கதைக்கிறாய்... நான் மட்டுமில்லை இஞ்ச கன பேர் உந்த எண்ணத்திலதான் இருக்கிறாங்கள்.”
நான் இந்தப் பதிலை சற்றும் எதிர்பார்க்கேல்ல.
“அண்ணே, இப்பதானே பாதை திறந்திருக்கு சமான் மலிவா வரூது எல்லாச் சாமானும் எடுக்கலாம். விதம் விதமா உடுப்புகளை இந்தியாவிலேந்து கூட றக்கலாம். பிறகேன் இப்பிடிச் சலிக்கிறியள்”
“உங்க எல்லாரும் இப்பிடித்தான் நெச்சுக் கொண்டிருக்கிறியள் போல... நேற்றும் ஒருத்தன் போனில கதைக்கேக்க இப்ப உங்கட பிசினஸ் ஆத்தலுக்குப் போகும் தானே எண்டான். உங்களுக்கு எங்கயடா எங்கட நிலை விளங்கப்போகுது. உங்களைச் சொல்லித் தப்பில்லை.”
“அண்ணே, விஷயத்தைச் சொல்லன் அப்பத்தானே என்ன நடக்குதெண்டு எங்களுக்கும் விளங்கும்.”
“பாதை திறந்தாலும் திறந்தாங்கள். எங்கட உழைப்புப் பட்டுது. வேற இடத்து வியாபரிகள் நடைபாதையில கடையைப் போட்டு மலிவா விக்கிறான். எங்கட சனம் வாயைப் பிழந்து கொண்டு அங்கதானே போய் நிக்குதுகள். அவனுகள் அங்கனேக்க தரம் குறைஞ்ச, பாவிச்ச பொருட்களை பூசி மினுக்கிக் கொண்டு வந்து சோவுக்கு அடுக்கி வச்சிருக்கிறான். எங்கட சனம் பாய்ஞ்சு விழுந்தடிச்சுக் கொண்டு போய் அவனுகளட்ட தானே வாங்குதுகள்.”
“அது சரி... ஆனா உங்களுக்கெண்டு இருக்கிற கிறவுட் இருக்குத் தானே அண்ணே...”
“அந்த பிரச்சினையான காலத்திலயே நாங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சாமானுகளை றக்கி ஓரளவுக்கேனும் மலிவான விலையில நாங்கள் நட்டப்பட்டாலும் பரவாயில்லையெண்டு கடையை நடத்தின்னாங்கள். இப்ப என்னடா எண்டா எங்கட வாடிக்கையாளர்கள் அத மறந்திட்டு இஞ்சேந்து பஸ் ஏறிப் போய் மலிவா சாமான் வாங்கி வரீனம். நாங்கள் கடையைத் திறந்து வச்சிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்... வசந்தம் எண்டது எங்களுக்கில்லைத் தம்பி, அந்த வியாபாரிகளின்ர வாழ்க்கைக்குத் தான்... அத இன்னும் நீ விளங்கிக் கொள்ளேல்லையோ...”
“விளங்குது விளங்குது வசந்தத்தை நம்பி இல்லையண்ணே... எண்டாலும் இப்பிடி நீங்கள் ஈ ஓட்டுற நிலை வருமெண்டு நினைக்கேல்ல... எங்கட சனம் இதோட எண்டாலும் பொருளாதார கஸ்டங்களை மறந்து வாழத் தொடங்கும் எண்டெல்லே நினைச்சன்.”
“நீயே இப்பிடிச் சொன்னா எப்பிடி தம்பி? சாமானுகளை எங்கட சனம் வாங்குது.. சரி.. காசெங்க போகுது? அவன்ர பெட்டிக்குள்ளையெல்லே போகுது. அத எங்களுக்கு தந்தா எங்கட பசி ஆறும் தானே... நாங்களும் சந்தோசப் படுவம் தானே... இண்டைய நிலை என்னெண்டா தம்பி, மலிவா சாமன் வரூது. தரம் குறைஞ்ச சாமானுகள் தான்.. ஆனாலும் வரூது.. எங்கட சனம் சாமானுகளை வாங்கிக் கொண்டு ஆருக்கோ காசைக் குடுக்குதுகள். அவன் பெட்டீக்க போட்டுக் கொண்டு சந்தோசமாப் போய்ச் சேர்றான் . அவன் தன்ர ஊருக்குப் போய் தன்ர பிள்ளை குட்டியோட சந்தோசமா இருக்கிறன்.
காலம் காலமா வியாபாரம் செய்யுற எங்கட நிலையை யாரெண்டாலும் யோசிச்சுப் பாத்தனீங்களே? வியாபாரிகளுக்கு மட்டுமில்லைத் தம்பி... விவசாயிகளுக்கும் கடற்தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான். எங்களால நம்பி ஒரு தொழில செய்ய முடியேல்லத் தம்பி. எங்கட உற்பத்திகளை சனம் வாங்குதில்லை. வெளீலேந்து பாக்கேக்க எங்கட சனத்தின்ர தரம் உயருது... கஸ்டம் குறையுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கீனம், உண்மை அதில்லைத் தம்பி. எங்கட உழைப்புக் கேற்ற ஊதியம் எங்களுக்கு இல்லாமல் போகுது.”
“எனக்கு விளங்குது உங்கட நிலை... இனி உங்களுக்குப் பிரச்சினியில்லை. தற்காலிக கடையெல்லாத்தையும் மூடச் சொல்லி மாநகர சபை உத்தரவு போட்டிருக்காமே...”
“நீ அடுத்தனீயடா தம்பி... உது நடக்குமெண்டு நினைக்கிறியே? அடே.. சபைக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20 000 ரூபா வருமானம் இதால வரூது. விட்டுடுவாங்கள் எண்டு நினைக்கிறியே... அது போக இவங்கள் முடிவெடுத்தாலும் நடைமுறைப் படுத்துறது இவங்கட கையில இல்லையே... இப்பிடித் தான் எல்லாமே... அடே உனக்கொரு விசயம் சொல்லுறன். உந்த சபை தான், தனக்குச் சொந்தமான நிலத்தை மூண்டு நட்சத்திர ஹோட்டல் கட்டுறதுக்கு தெற்குப் பக்க கொம்பனி ஒண்டுக்கு குடுத்திருக்கு. எங்கட சனம், வெளி நாட்டுச் சனம் எத்தினையோ பேர் கேட்டுக் குடுக்காதத அவங்களுக்கு குடுத்திருக்காம். எங்கட சனம் வருமானம் ஈட்டுறத அவங்களே விரும்பேல்லப் போல... ஆரட்டை இதெல்லாத்தையும் சொல்லியழ...”
அண்ணே!
ReplyDeleteமெத்தச் சரியாச்சொன்னியள், சில மரமண்டையளுக்கு உது விளங்குதில்லை... ஏதோ வசந்தமாம். எல்லாம் கொஞ்சக்காலத்துக்கு ஆடித்தான் ஓயும் போல கிடக்கு...
இருக்கிற நல்லதுகளை காப்பாத்தோணும் கண்டியளோ.....
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
அது மட்டுமா நண்பரே யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவை முதற்கொண்டு எத்தனைகளில் அவர்களுக்கு வசந்தம் வீசுகின்றது
ReplyDelete