இலங்கைப் பதிவர் சந்திப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை(23/8/2009) காலை ஒன்பது மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது. இலங்கையிலிருந்து வலைப்பதிவிடும் சிறந்த வலைப்பதிவர்கள் மட்டுமல்லாமல் என்னைப் போன்று அண்மையில் எழுத ஆரம்பித்துள்ள பதிவர்கள் முதல் எழுதத்துடிக்கும், எழுத்துக்களை வாசிக்கும் நெஞ்சங்கள் உட்பட விமர்சகர்கள் என அனைவரையும் அன்புடன் அழைத்திருக்கிறார்கள் ஏற்பாட்டுக்குழுவினர்.
சும்மா வீட்டில நிண்டு வேலை வெட்டியில்லாமல் பொழுதைப் போக்குவதை விட ஒருமுறை அங்க என்னதான் நடக்கப்போகுது எண்டு எட்டிப்பார்க்கலாம் எண்டு நினைக்கிறன். பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாரும் வரப்போறாங்கள். ஒருக்கால் ஆக்களைப் பாத்ததாகவும் போகுது. முடிஞ்சா அவங்களோட அறிமுகம் ஏற்படுத்தியதாகவும் போகுது. ஆனால் அங்க வந்து என்னை மட்டும் ஆரெண்டு தேடிப்போடாதேங்கோ. விசேட சாப்பாடும் குடுக்குறாங்களாம். விடுவமா என்ன? நாங்களும் வருவமெல்லோ...
மேலதிக விவரங்களுக்கு...
அப்பாடா.... பால்குடி safeஆ இருக்கிறார். ஆளைக் கனகாலமா இணையப் பக்கம் காணாமல் தவிச்சுப் போனன்... (ஆனா கோழிப்புக்கை சாப்பிட்ற இடத்தில கண்டனான்)
ReplyDeleteஉண்மைதான் கீத், கொஞ்ச நாள் இணையப்பக்கம் வரேல்லத்தான். இனிமேலாவது முயற்சி செய்து தொடர்ச்சியா வரப்பாக்கிறன். (சாப்பாடெண்டா, நாங்கள் எங்கேயும் நிப்பமெல்லோ... உண்மையை சொல்லணுமெண்டா கனகாலத்துக்குப் பிறகு கோழிப்புக்கை சாப்பிட்டன். அதுவும் என் இனிய கொழும்பு வாழ் கல்லூரி நண்பர்கள் சிலருடன்...)
ReplyDelete