மீளப்பெறல் வங்கி மீதிப்பணம்ரூ.50 ரூ.50 ரூ.25 ரூ.25 ரூ.10 ரூ.15 ரூ.8 ரூ.7 ரூ.5 ரூ.2 ரூ.2 ரூ.0 -------- -------- ரூ.100 ரூ.99 -------- --------
கணக்கு எங்கேயோ உதைக்குதே? கணக்கில எங்க பிழை எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம். நீங்கள் கணக்கியலில எப்பிடி எண்டு பாத்திடுவமே?
எனக்குத் தெரிந்த கணக்கியலின்படி மீளப்பெறல்களின் கூட்டுத்தொகை வங்கியில் ஆரம்பத்திலிருந்த பணத்துக்கும் இப்போதுள்ள பணத்துக்குமான வித்தியாசத்துக்கு சமமாக இருந்தால் போதுமானது. இந்தக் கணக்கின்படி ஆரம்பப் வைப்பு ரூபா 100. கடைசி சேமிப்பு ரூபா 0. ஆகவே மொத்த மீள்பெறப்பட்ட பணம் 100 ரூபாய். வாடிக்கையாளர் மீளப்பெற்ற பணத்தின் மொத்தக் கூட்டுத்தொகை அவரது வங்கியில் உள்ள மீதித்தொகைகளின் கூட்டுத்தொகைக்கு சமமாக இருக்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. கொஞ்சம் பெரிய தொகைக்கு இதே போல் செய்தால் பெரிய வித்தியாசங்கள்கூட தென்படும். இங்கே இரண்டு கூட்டுத்தொகைகளும் கிட்டத்தட்ட ஒரேயளவாயிருப்பது கூட தற்செயலான நிகழ்வு என்றே சொல்லலாம்.
ReplyDeleteமிகவும் சரியான விடை கீத், அத்துடன் நீங்கள் அளித்துள்ள விளக்கமும் நன்றாக உள்ளது. நீங்கள் கணக்கியலிலும் புலி என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
ReplyDelete