Friday, June 26, 2009

கணக்கு_05

கணக்கு_04 இலுள்ள அதே கணக்குத்தான். ஆனால் மாபிள்களின் எண்ணிக்கை ஒன்பதுக்குப் பதிலாக பன்னிரெண்டு.
கணக்கை மீண்டும் தருகிறேன்.

ஒத்த உருவமுடைய பன்னிரெண்டு மாபிள்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று மற்றையவற்றிலிருந்து நிறையால் வேறுபட்டது. (நிறை கூடவாகவோ குறைவாகவோ இருக்கலாம்.) நெம்புத் தராசு தரப்பட்டுள்ளது. நிறைப்படிகள் தரப்படவில்லை. அதிகமாக மூன்று தடவைகள் மட்டுமே நிறுக்கப்பட வேண்டுமெனின் நிறையால் வேறு பட்ட மாபிளை கண்டு பிடிக்க வேண்டும், அதே நேரம் அது மற்றையவற்றை விட நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள்.
எங்கே உங்கள் திறமையை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

2 comments :

  1. முதலில் ஆறு மாபிள்களை ஒரு பக்கமும் மற்ற ஆறை மறு பக்கமும் போடவும்.

    நிறை கூடிய செட் மாபிள்களை மூன்று மூன்று ஆகா இரு புறமும் போட்டு நிறுக்கவும்.

    நிறை கூடிய செட் மாபிள்களில் இரண்டை எடுத்து ஒன்று ஒன்றாக இரு புறமும் போட்டு நிறுக்கவும்.


    இரண்டும் ஒரே நிறையைக் காட்டினால் தராசில் போடாமல் இருந்த மாபிள் நிறை கூடியது.


    இரண்டும் வேறு வேறு நிறைகளைக் காட்டினால், நிறை கூடியது, நிறை கூடிய மாபிள்.

    ReplyDelete
  2. முயற்சிக்குப் பாராட்டுக்கள். குழப்பத்துக்குரிய மாபிள் நிறை கூடியதோ, இல்லை நிறை குறைந்ததோ எனத் தரப்படவில்லை. அந்த மாபிளையும் கண்டு பிடிக்க வேண்டும். அதே நேரம் அந்த மாபிள் நிறை கூடியதோ குறைந்ததோ எனவும் கண்டு பிடிக்க வேண்டும்.

    ReplyDelete