Thursday, January 07, 2010

கணக்கு_10

நான் ஒன்று தொடக்கம் பத்து வரையிலான இலக்கங்களுக்குள் அடுத்துள்ள இலக்கங்கள் இரண்டை நினைத்தேன். அதிலொன்றை கண்ணனிடமும் மற்ற இலக்கத்தை நந்தனிடமும் இரகசியமாகச் சொன்னேன். இருவருக்குமிடையில் கீழுள்ள கலந்துரையாடல் மட்டுமே நடந்தது.

நந்தன் : எனக்கு உன்னுடைய இலக்கம் தெரியாது.
கண்ணன் : எனக்கும் உன்னுடைய இலக்கம் தெரியாது.
நந்தன் : ஆம், உன்னுடைய இலக்கத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.

நான் நினைத்த இலக்கங்களுக்குச் சாத்தியமான, நான்கு சோடி இலக்கங்கள் (நான்கு விடைகள்) மேற்குறித்த கலந்துரையாடலிலிருந்து உங்களால் கண்டு பிடிக்க முடியும். எங்கே, உங்களுடைய மூளையைக் கொஞ்சம் கசக்கி விடையைக் கண்டு பிடியுங்கள் பார்ப்போம். விளக்கங்களுடன் விடைகளை இணைத்தால் உதவியாக இருக்கும்.

5 comments :

  1. (3,4), (4,5), (5,6), (6,7)
    muthlavathu kuttinpadi 1, 9 illai enra mudivirku irnadavathu napar varalaam.
    irendavathu kuttin padi 2,3 & 7,8 varaathu

    ReplyDelete
  2. சஞ்சயனின் வருகைக்கும் முயற்சிக்கும் பாராட்டுக்கள்.
    முதற்கூற்றின் படி 1,9 இருக்கமுடியாது என்பது சரியானது.
    கண்ணனுக்கு 3 சொல்லப்பட்டிருந்தால் நந்தனுக்கு 2 அல்லது 4 சொல்லப்பட்டிருக்கலாம். அப்படிப் பார்க்கும்போது பல விடைகள் வரலாம். ஆனால் நான்கு விடைகளே பொருத்தமானவை.
    முதற்கூற்றைப் போல இரண்டாம் கூற்றைப் பாவிக்க வேண்டும்.
    மூன்றாவது கூற்றின் படி இறுதி விடை கண்டு பிடிக்க முடிந்திருக்கிறது. சில வேளை எண்களை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதையும் கருத்திற்கொண்டு மீண்டும் முயற்சிக்கவும்.

    ReplyDelete
  3. விடைகள் (2,3) , (3,4) , (8.9) , (7,8) ...சரியா ...சரி எண்டால் விளக்கம் தரலாம்

    ReplyDelete
  4. கருணையூரானின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
    முதலிரு விடைகளும் சரியானவை. மற்ற இரு விடைகளும் ஒழுங்கு மாறியிருக்கின்றன.
    எப்பிடிக் கண்டு பிடிச்சனீங்கள் எண்டு ஒருக்கா எங்களுக்கும் சொல்லுங்கோவன்...

    ReplyDelete
  5. கருணையூரான்18 January, 2010 14:21

    நீங்களே அதை சொன்னால் நல்லா இருக்கும்

    ReplyDelete