Sunday, May 16, 2010

வார்த்தைகள் இல்லை...

இரங்கல் கவிதை எழுத என்னால் முடியவில்லை...
எத்தனை பேர் எண்டு எண்ணவும் முடியவில்லை...

முள்ளியில் நின்று வெள்ளி முழைக்குமென்று விழி பிதுங்கியவர்களும்
வாய்க்கால் வழியாக வாழ்வு வருமென்று மன்றாடி நின்றவர்களும்
மனிதாபிமானம் மண்ணில் இன்னும் இருக்கென்று நம்பியவர்களும்
இனி என்னத்தைச் செய்ய என எல்லாத்தையும் இழந்தவர்களும்
சேர்ந்திருந்த செய்தியறிந்தும் செய்து முடித்தனர்...

எதுவுமே நடக்காததைப் போல துடைத்தெடுத்தனர்...
அதையும் வெளியில் தெரியாமல் இருட்டடிப்புச் செய்தனர்...
அப்பாவிகளின் அழுகுரல்கள் அடங்கின...
அவர்களின் நம்பிக்கைகளும் தாகங்களும் அடக்கப்பட்டன...
அவர்களின் உடலங்களும் புதைக்கப்பட்டன...

ஆரார் மாண்டார்? ஆரார் தப்பினர்? ஆரார் இன்னும் இருக்கின்றனர்
அறியாது இன்னும் தவிக்கும் நெஞ்சங்களுக்கு
ஆறுதல் சொல்லவும் என்னிடம் வார்த்தைகள் இல்லை...

6 comments :

  1. வார்த்தைகள் மெளனிக்கின்றன செத்துவிடவில்லை... உயிரின் நினைவலைகள் உயிர்களுக்குள் இப்போது உறங்குநிலை

    ReplyDelete
  2. கண்ணீர் நிறைந்த காவியத்தின் ஒரு நினைவு மீட்டலாய் விளங்கும் கவிதை.
    வலிகளுக்குள் வார்த்தைகளைத் தேடினாலும் இழந்து போன உறவுகளின் வாழ்க்கையைத் தேட முடியாது என்பது மட்டும் நிஜம்.
    //எதுவுமே நடக்காததைப் போல துடைத்தெடுத்தனர்...//



    அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று யாரோ சொல்வது மட்டும் காதுகளில் கேட்கிறது. ஏனென்றால் தமிழர் வாழ்வில் இதெல்லாம் சகஜமப்பா.

    ReplyDelete
  3. பட்டதை நல்லா சொல்லியிருக்கிறியள் பால்குடி ..... ஆரார் மாண்டென்ன ஆரார் தப்பி என்ன மாண்டுபோன தமிழ் இனத்தை மீட்டு செல்ல அந்த புத்த பகவான் வந்தாலும் இனி முடியாது lol

    ReplyDelete
  4. சுபாங்கன், றமேஸ், கமல், கருணையூரான் மற்றும் ஆதிரை ஆகியோரின் வருகைஇகும் கருத்துக்களுக்கும் நன்றி.

    றமேஸின் கருத்தோடும் ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete