Saturday, November 21, 2009

மிச்சக் காசு

எத்தினை வயசெண்டு சரியா ஞாபகம் இல்லாட்டிலும் நடந்த சம்பவம் நல்லா ஞாபகம் இருக்கு. சின்ன வயசில சில்லறைச் சாமான்கள் வாங்க கடைக்குப் போறது வழக்கம். அம்மா அளவாக் காசும் தந்து வாங்க வேண்டிய சாமானையும் அளவையும் வடிவாச் சொல்லி விடுவா. அதை மனப்பாடம் பண்ணிக் கொண்டு போய் கடைக்காரரட்டை ஒப்புவிக்கிறது. அவரும் சாமான் தருவார். சில வேளை அளவுகள் பிழைச்சாலோ அல்லது அந்தச் சாமான்ர விலை கூடினாலோ கடைக்காரர் நான் குடுக்கிற காசுக்கேற்ற அளவுக்குச் சாமான் தருவார். அதை அப்பிடியே கொண்டு வந்து அம்மாட்டக் குடுப்பன். அவர் ஏதாச்சும் விலை கூடீட்டுது குறைஞ்சிட்டுது எண்டு சொல்லுற வசனங்களையும் மனப்பாடம் பண்ணிக் கொண்டு வந்து அம்மாட்ட ஒப்புவிப்பன்.

கடைக்கு நடந்து போகேக்க தனியாப் போனாலும் ஒரு சந்தோசம். வழியில கிடக்கிற இரும்புச் சாமான்களை (சத்தம் போடக்கூடிய) தட்டிக் கொண்டு போறது. நாய்களைத் தாண்டிப் போறதுக்கு பதுங்கிப் பதுங்கி எடுக்கிற முயற்சி. கிடக்கிற கல்லுகளைப் பொறுக்கி எறிஞ்சு கொண்டு போறது. மதில்களைக் கடக்கேக்க எத்தினை கவடு வச்சுக் கடக்கிறன் எண்டு எனக்கு நானே போட்டி வைக்கிறது. முன்னுக்கு நடந்து போறாக்களைப் பிடிக்கிறதுக்காக வேகமா நடக்கிறது. கூட நடந்து போறாக்களோட ஆர் முதல்ல போறதெண்டு பந்தயம் வச்சு நடக்கிறது. போற வாறாக்களுக்கு சிரிச்சுத் தலையாட்டிக் கொண்டு போறது. சில வேளை அவையளுக்கு கோபம் வரக்கூடிய கதை சொல்லிப் போட்டு, விட்டுட்டு ஓடுறது. அண்ணே எங்க போறியள், உங்கட சைக்கிள்ல வரட்டோ எண்டு கேட்டு ஏறிப் போறது. இப்பிடியே சந்தோசமா கடைக்குப் போய்ச் சேரலாம்.

இப்பிடித்தான் ஒரு நாள் நூறு கிறாம் தேயிலை வாங்கிக் கொண்டுவரச் சொல்லி அம்மா சில்லறைக் காசுகளை எண்ணி அளவாத் தந்து விட்டவா. நானும் கடைக்குப் போய் கடைக்காரரட்டை, என்னட்ட அம்மா தந்து விட்ட காசெல்லாத்தையும் குடுத்து நூறு கிறாம் தேயிலை வேணும் எண்டு கேட்டனான். நான் குடுத்த காசை எண்ணிப் போட்டு கடைக்காரர் ‘அம்பது சதம் இருக்கோ?’ எண்டு கேட்டார். நான் ‘இல்லை, அம்மா இவ்வளவுதான் தந்து விட்டவா’ எண்டு சொன்னன். தேயிலையை நெறுத்துத் தரேக்க கடைக்காரர் தன்ர கல்லாப் பெட்டியைத் திறந்து அம்பது சதத்தை எடுத்து எனக்குத் தந்தார். எனக்கு வலு சந்தோசம். வீடு வரும் மட்டும் நல்ல புழுகு, ஏனெண்டா நான் குடுக்க வேண்டிய (கடைக்காரன் என்னட்ட கேட்ட காசு) அம்பது சதம் என்னட்ட இல்லையெண்ட படியா அவர் தந்திருக்கிறார் எண்ட நினைப்பில வீடு வந்து சேந்தன்.

ஆறு ரூபா பிரயாணப் பணத்துக்கு நான் பத்து ரூபா நீட்டும்போது ஒரு ரூபா இருக்கோ என நடத்துனர் கேட்கும் சந்தர்ப்பங்களில் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது.

14 comments :

  1. ம்ம்.அதெல்லாம் ஒரு காலம்
    எனக்கும் இப்படி பல அனுபவம் உண்டு :)

    ReplyDelete
  2. ஹி ஹி....

    சின்ன வயசு அனுபவங்கள் எப்போதும் மனதிற்கு இதமானவை தான் என?

    ReplyDelete
  3. சுவையான அனுபவம்.

    ReplyDelete
  4. ஆஹா.... அப்ப நான் மட்டும் அப்பிடிப் புளுகப்படேல்லை. இவருக்கும் சேம் ப்ளட் இருந்திருக்கு அய்யா...

    ReplyDelete
  5. சஞ்சீவன், சுபாங்கன், கோபி மற்றும் ஆதிரை ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    கோபி, உண்மைதான், சின்ன வயசு அனுபவங்கள் எப்போதும் இனிமையானவையே... வாழ்க்கையைப் பற்றிய நிறைந்த எதிர்பார்ப்பின்றி வாழ்ந்த காலத்து நினைவுகள் அவை.

    ReplyDelete
  6. எம்.கே. முருகானந்தன் ஐயா, thinks why not - wonders how மற்றும் கீத் ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
    //same experience...
    // ஆஹா.... அப்ப நான் மட்டும் அப்பிடிப் புளுகப்படேல்லை.

    இப்ப எனக்கு இன்னும் வலு சந்தோசம்... என்னைப் போலவே கொஞ்சப் பேர் இருக்கினம் எண்டு நினைச்சு...

    //இவருக்கும் சேம் ப்ளட் இருந்திருக்கு
    கீத், அதனை மாற்ற முடியாதே...

    ReplyDelete
  7. கருணையூரான்24 November, 2009 09:22

    பால் குடி..........
    சின்ன வயசு திருதாளங்களை எடுத்துவிட்டு என்னையும் ஒருக்கா பழசை நினைக்க வைச்சிடிங்க ...... ஆனால் நீங்க அந்த அம்பது சதத்தை திருப்பி அம்மாட குடுத்திடிங்க நான் எண்டா 2 தோடம்பழ இனிப்பு வாங்கி திண்டிருப்பன் .... அந்த வகைல ஆரம்பமே பிரமாதம்.............

    ReplyDelete
  8. சுப்பர்டா தம்பி.. நாமளும் உப்படித்தான் இருந்தம்.. ஹ்ம்ம்..

    ReplyDelete
  9. கருணையூரானதும் புல்லட் அண்ணாவினதும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

    கருணையூரான், உங்களுடைய பதிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க்கிறேன். இஞ்சார், நான் பால்குடி, இப்பிடிக் குழப்படிப் பழக்கம் சொல்லித் தந்து கெடுத்துப் போடாதேங்கோ.

    ReplyDelete
  10. :))
    இனிய நினைவுகள். எப்போதுமே இதை நினையுங்க. அடிக்கடி சிரித்துக் கொள்ளலாம் (வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். அதனால் சொன்னேன்...)

    ReplyDelete
  11. விபுவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    சிரிக்கிறதுக்கு இப்பிடி நிறைய அனுபவம் இருக்கு....

    ReplyDelete