நான் என்னுடைய தம்பியின் தற்போதைய வயதை ஆண்டு மாதங்களில் சொன்னேன். ஆனால் வயதைப் பதிந்தவரோ நான் சொன்ன ஆண்டை மாதங்களாகவும் மாதத்தை ஆண்டுகளாகவும் பதிந்து விட்டார். இப்போது தம்பியின் வயது உண்மை வயதின் 5/8 மடங்காக இருந்தது எனின், தம்பியின் உண்மையான வயது என்ன?
வரவர மூளை மந்தமா தான் யோசிக்குது...
ReplyDelete7 வயது 4 மாசமா...
யாராவது சொன்னாப்பிறகு செக் பண்ணி பார்ப்பம்.
ReplyDeleteபால்குடியைக் கொலை செய்யிற வயசெண்டு சொன்னா கோவிக்க மாட்டீர்தானே
ReplyDeleteசரியான விடைக்குப் பாராட்டுக்கள் நிமல். சஞ்சீவன் மற்றும் கீத்தின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஇந்த வயசில தம்பி இருந்தால் கீத் சொன்னதில கோபிக்க என்ன இருக்கு...
எனக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரி வேண்டும்...
ReplyDeleteஎன்னுடைய மின்னஞ்சல் முகவரியான kanagagopi@gmail.com என்பதற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்புகிறீர்களா?
எப்பிடி என்று விளங்கப்படுத்தோணும்.... இல்லாட்டா இது அளாப்பல்
ReplyDeleteவிளங்கீற்று விளங்கீற்று... 7 வருசம் 4 மாதம் அதை நான் 2007/04 அப்படியாக விளங்கி மண்டையப் போட்டு உடைச்சனான்.
ReplyDeleteகீத், நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். முயற்சி செய்து தீர்க்க முடியாமல் போனவர்களுக்காக : தம்பியின் உண்மை வயதை x ஆண்டுகள் y மாதங்கள் என்போம். எனவே பதியப்பட்ட வயது y ஆண்டுகள் x மாதங்கள். ஆண்டும் மாதமும் கலந்து வருவதனால் வயதை மாதங்களாக்குவோம் (ஆண்டுகளாக்கவும் முடியும்)
ReplyDelete5/8(x*12+y) = y*12+x
60x + 5y = 96y + 8x
52x = 91y
x , y க்குப் பல தீர்வுகள் இருக்கின்றன. ஆனாலும் இந்தக் கணக்கின் விசேடம் என்னவெனில் ஒரேயொரு தீர்வு தான் பொருந்தும். அதாவது x அல்லது y 0 க்கும் 12க்கும் இடையிலே தான் இருக்க முடியும். அதாவது தீர்வுகளில் ஒன்றான (x=14), வயது 14 வருடம் என்றால் பதியும் போது வயது 14 மாதங்களாகும். அது பொருத்தமற்றது. எனவே ஒரேயொரு தீர்வு 7 வருடங்கள் 4 மாதங்கள் என்பதே சரியான விடை.
ம் .....
ReplyDelete