Monday, April 13, 2009

கணக்கு விடுறான்

பேச்சுத் தமிழில் ‘கணக்கு விடுறான்’ என்பதன் பொருள் ஏமாற்றுகிறான் என்பதாகும். ஆனால் நான் உங்களை ஏமாற்றாமல் சிந்திக்க வைக்க விளைகிறேன்.

கணக்கு விடுறான் என்ற இந்தப் பகுதியினூடு சிந்திக்க வைக்கக் கூடிய நுணுக்கங்களுடனான ஆனால் அடிப்படை கணித அறிவுடன் விடை காணக்கூடிய கணிதப் புதிர்களைத் தரலாம் என்று இருக்கிறேன். இந்தப் பகுதியினூடு உங்களை சிந்திக்க வைப்பதே எனது நோக்கம். பொழுது போகாத நேரங்களில் இவை பயன்படலாம். அல்லது மற்றவர்களை கேள்வி கேட்டு மடக்கவும் பயன்படும். விடை அறிந்தவர்கள் விளக்கத்துடன் பின்னூட்டல் மூலம் இணைத்து விட்டீர்களானால் சிறப்பாக இருக்கும்.

கணக்கு_01


விருந்தாளி ஒருவர் ஒரு வீட்டிலுள்ள பிள்ளைகளின் வயதுகளை அறிய விரும்பினார். வீட்டிலுள்ளவர் விருந்தாளியின் அறிவைச் சோதிக்க விரும்பினார். இருவருக்குமிடையில் நடந்த பின்வரும் உரையாடலை கவனித்து பிள்ளைகளின் வயதுகளைக் காண்க.


விருந்தாளி : உங்கள் பிள்ளைகளின் வயதுகளைச் சொல்லுங்கள்.

வீட்டிலுள்ளவர் : எனது மூன்று பிள்ளைகளின் வயதுகளின் பெருக்கங்கள் 36 ஆகும். அத்துடன் அவர்களின் வயதுகளின் கூட்டுத்தொகை முன் வீட்டு சாளரங்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும். (வயதுகள் முழு எண்களிலாகும்)
(விருந்தாளி சாளரங்களை எண்ணிய பின்னர்)

விருந்தாளி : நீங்கள் தந்த தரவு போதாது.

வீட்டிலுள்ளவர் : எனது மூத்த பிள்ளைக்கு கன்னத்தில் பெரிய மச்சம் உள்ளது.

விருந்தாளி : ஆ... கண்டு பிடித்து விட்டேன்... உங்கள் பிள்ளைகளின் வயதுகள்.....???

9 comments :

  1. விருந்தாளிக்கு சாளரங்களின் எண்ணிக்கை தரவாகும். ஆனால், எங்கள் முன் வீட்டில் சாளரங்கள் காணக்கிடைக்கவில்லை.

    ReplyDelete
  2. முன் வீட்டுச் சாளரங்களின் எண்ணிக்கை தரப்படாமலே இந்தப் புதிரை வாசிப்பவர்களால் இதற்கு விடை காண முடியும். அதுதான் இந்தப் புதிரின் சிறப்பு.

    ReplyDelete
  3. 1,1,26
    1,2,18
    1,3,12
    1,4,9
    1,6,6
    --
    2,3,6
    --
    3,3,4

    இது சுத்த பிக்கலித்தனம்

    ReplyDelete
  4. நண்பரே, முதலாவது கூற்றுக்கு பல விடைகள் வரலாம். ஆனால் மிகுதி இரண்டு கூற்றுக்களையும் சொன்னதில் ஏதோ விஷயம் இருக்கிறது போலத் தெரிகிறது.

    ReplyDelete
  5. நண்பரே, மூத்த பிள்ளைக்கு மச்சம் என்பதிலிருந்து, மூத்தவர்கள் இரட்டயர்கள் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்! சாளாரங்கள் சமச்சீராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை, இளயவர்கள் இரட்டயர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு!

    நான் தெளிவாகவுள்ளேன், உமது விடையை நியாயப்படுத்தும், நான் எனது பிரதி வாதத்தை தொடர்கிறேன்!

    ReplyDelete
  6. முதற்தரவு : பெருக்கல் 36
    இரண்டாம் தரவு : கூட்டல் மூலம் குறித்த சரியான விடையைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
    மூன்றாம் தரவு : மூத்த பிள்ளை ஒன்று உண்டு.

    மூன்றாவது தரவிலிருந்து மூத்தவர்கள் இரட்டையர் இல்லை என்ற முடிவுக்கு வந்தது மிகவும் சரியானதே. பாராட்டுக்கள் நண்பரே. ஆனால் இரண்டாவது தரவு சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.

    மூன்று இலக்கங்களைப் பெருக்க 36 வரக்கூடியதாக எண்சோடிகளை எழுதி சாளரங்களின் எண்ணிக்கையை ஊகிப்பதற்காக சோடியிலுள்ள எண்களைக் கூட்டுவோம். நீங்கள் கூறியது போல 3,3,4 விடையாக இருப்பின் சாளரங்களின் எண்ணிக்கை 10. மூன்றாவது தரவு இல்லாமலே விடையைக் கூறி விட முடியும். அதாவது எண்சோடிகளில் ஒரேயொரு சோடி மட்டுமே கூட்டுத்தொகையாக 10 ஐக் கொண்டுள்ளது.(சாளரங்களை எண்ணிப்பார்த்து விருந்தாளி நேரடியாகவே விடையைக் கூறக் கூடியதாக இருந்திருக்கும் - மூன்றாவது தரவு சொல்லப்படாவிடின் வாசிப்பவர்களால் சரியான விடை கண்டு பிடிக்க முடியாது- பல விடைகளை ஊகிக்க முடியும்)

    ஆகவே கூட்டுத்தொகையை வைத்து விடை கண்டு பிடிக்க முடியவில்லையாதலால் எண்சோடிகளில் கூட்டுத்தொகை சமனாக வரக்கூடிய எண்சோடிகளே விடையாகும்.

    இனி மூன்றாவது தரவைப் பிரயோகித்து இறுதி விடையைப் பெற முடியும்.

    நண்பரே நீங்களே இறுதி விடையை இணைத்து விடுங்கள்.

    ReplyDelete
  7. என் முதிர்ச்சியடயா நிலை, சாமரித்தியமான புதிர்!#
    நல்லது நண்பரே, (2,2,9)

    ReplyDelete